இலங்கையில் கட்டுக்கடங்காமல் பரவியுள்ளது கொரோனா வைரஸ் – இராஜாங்க அமைச்சர் தயாசிறி தெரிவிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்கடங்காமல் பரவியுள்ளது எனவும், பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியிருந்த தயாசிறி, சிகிச்சைகளை நிறைவு செய்துகொண்டு வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றின் அனுபவங்களையும், அரசு மற்றும் பொதுமக்கள் கவனம் செலுத்த வேண்டிய விடயங்களையும் அவர் தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:-

“அனைத்துக் கொரோனா நோயாளிகளையும் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பும் நிலையில் அரசு இல்லை. பொதுமக்கள் பொறுப்பாக இருப்பதன் மூலமே கொரோனாத் தொற்றில் இருந்து பாதுகாப்புப் பெற முடியும்.

நாடு முழுவதும் கொரோனாத் தொற்று வேகமாகப் பரவி வருகின்றது. காய்ச்சல், இருமல், சுவையின்மை போன்ற அறிகுறிகள் இருந்தால், குடும்ப உறுப்பினர்களை விட்டு விலகி, சுயதனிமைப்படுத்தலில் இருப்பதே சிறந்தது.

வெளிநாடுகளில் உள்ள 60 ஆயிரத்துக்கும் அதிகமான இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கும்போது, அவர்கள் அனைவருக்கும் அரசு தனிமைப்படுத்தல் நிலையங்களை ஒதுக்குவது சிரமமான காரியம். அவ்வாறானவர்களை வீடுகளில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.