சுரேஷ் பிரேமச்சந்திரனின் குற்றச்சாட்டுகளை அடியோடு நிராகரித்தார் கஜேந்திரகுமார்!

ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப் பேச்சாளருமான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனால், தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

ஐ.நாவில் சமர்பிப்பதற்கான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வரைபில் இனப்படுகொலை என்ற வசனத்தை உள்ளடக்கவில்லை என்றும், சர்வஐன வாக்கெடுப்பு கோரிக்கை தொடர்பான யோசனைக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விரும்பவில்லை என்றும் கடந்த வாரம் ஊடக சந்திப்பொன்றில் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், யாழ். கொக்குவிலில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் கஜேந்திரகுமாரினால் இன்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் சுரேஷ் பிரேமச்சந்திரனின் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்விகள் எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், குறித்த குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரிப்பதாகத் தெரிவித்தார்.

அத்துடன் சுரேஷ் பிரேமச்சந்திரன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் அவர் முன்வைத்தார்.

Leave A Reply

Your email address will not be published.