யாழ்ப்பாணம் நெடுந்தூர பேரூந்து நிலையத்தின் திறப்புவிழா.

நகர அபிவிருத்தி, கரையோர பாதுகாப்பு, கழிவுப்பொருள் அகற்றுகை மற்றும் சமுதாய தூய்மைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் கலாநிதி நாலக கொடஹேவா பணிப்பிற்கமைய,

நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அனுசரணையில் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு 122 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் யாழ்ப்பாணம் முனீஸ்வரன் வீதியில் அமைக்கப்படுள்ள இவ் நெடுந்தூர பேரூந்து நிலையத்தின் திறப்புவிழா இன்று (27) காலை இடம்பெற்றது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத்தலைவர் அங்கஜன் இராமநாதன், வடமாகாண ஆளுனர் பி.எஸ்.எம் சார்ள்ஸ், கடற்றொழில் நீரியல்வள அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா , யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன், யாழ் மாவட்ட அரச அதிபர் க.மகேசன் உட்பட அரச அதிகாரிகள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.