மசாஜ் நிலையம் என்ற பெயரில் விபச்சார நிலையம் சுற்றி வளைப்பு.

பாடசாலையின் எதிரே மசாஜ் நிலையம் என்ற பேரில் விபசார விடுதி நால்வர் சிக்கினர்

திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மத்திய வீதியில், பாடசாலையின் எதிரே மசாஜ் நிலையம் என்ற பேரில் நீண்ட காலமாக இயங்கி வந்த விபசார விடுதியொன்று, பொலிஸாரால் (27)முற்றுகையிடப்பட்டது.

இதன்போது 3 பெண்கள் உட்பட விடுதி நடத்திய ஆணொருவரையும் தாம் கைது செய்ததாக திருகோணமலை தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விடுதிக்கு சீல் வைக்கப்பட்டதுடன், கைது செய்யப்பட்டவர்களை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தலைமையகப் பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.