விஜய் காரை நகரவிடாமல் ரசிகர்கள் செய்த அன்பு தொல்லை

விஜய் இன்று திடீர் என, பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் கரூர் மாற்று விழுப்புரத்தை சேர்ந்த ரசிகர்களை சந்தித்தார். விஜய் காரில் உள்ளே வரும் போது ரசிகர்கள் செய்த அலப்பறை… வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தளபதி விஜய் இன்று திடீர் என, பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் கரூர் மாற்று விழுப்புரத்தை சேர்ந்த ரசிகர்களை சந்தித்தார். விஜய் காரில் உள்ளே வரும் போது ரசிகர்கள் செய்த அலப்பறை… வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, அடுத்ததாக ‘கோலமாவு கோகிலா’ மற்றும் ‘டாக்டர்’ படங்களை இயக்கி முடித்துள்ள, நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தன்னுடைய 65 ஆவது படத்தை நடிக்க உள்ளார் விஜய். சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இந்நிலையில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் முன்பு, எப்போது போல் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரசிகர்களை சந்திப்பது போல், இந்த முறை கரூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ரசிகர்களை, பனையூரில் உள்ள தன்னுடைய அலுவலகத்தில் சந்திக்க ஏற்பாடு செய்தார். சுமார் 300 க்கும் மேற்பட்ட ரசிகர்கள் விஜய்யை காண வந்திருந்தனர்.

மேலும் விஜய் பனையூர் அலுவலகத்துக்கு வரும் செய்தியை அறிந்து, பல ரசிகர்கள் அலுவலகம் முன்பு கூடினர். குறிப்பாக விஜய் தன்னுடைய காரில் வந்த போது, தளபதி… தலைவா… தலைவா… என முழக்கம் எழுப்பி காரை நகரவிடாமல் சூழ்ந்து கொண்டனர். சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகே கார் அலுவலகம் உள்ளே சென்றதாக கூறப்படுகிறது.

வெறித்தனமான ரசிகர்கள் வெளியே செய்த அளப்பறையால்.. ரசிகர்களை சந்திக்க வந்த விஜய், ஒரு சில வார்த்தைகளை மட்டுமே பேசி விட்டு, அழைப்பை ஏற்று வந்த ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டு அங்கிருந்து வெளியேறினார்.

தற்போது இதுகுறித்த வீடியோ… சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது…

Leave A Reply

Your email address will not be published.