42 வயது தொழிலதிபருக்கு இரண்டாம் தாரம் ஆகிறார் டிடி(DD)?

சினிமாவில் சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த திவ்யதர்ஷினிக்கு சரியான பட வாய்ப்புகள் அமையாததால் தொகுப்பாளராக தன்னுடைய ரூட்டை மாற்றினார். அது பெரியளவில் அவருக்கு கை கொடுத்தது.

தன்னுடைய துறுதுறுப்பான பேச்சாலும், ரசிக்கவைக்கும் திறனாலும் சூப்பர் ஸ்டார் தொகுப்பாளினியாக மாறினார். இன்று தொகுப்பாளர்களாக இருக்கும் அனைவரையும் விட அதிக சம்பளம் வாங்குபவர் திவ்யதர்ஷினி(DD) தான்.

அது என்னமோ தெரியவில்லை விஜய் டிவியில் பணியாற்றும் ஒவ்வொரு தொகுப்பாளர்களும் தங்களுடைய வாழ்க்கையில் இரண்டு திருமணங்கள் செய்து கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அந்த வகையில் திவ்யதர்ஷினி முதலில் தன்னுடைய நீண்டகால நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த விழாவை விஜய் டிவி சிறப்பாக கொண்டாடியது. அப்போதே திவ்யதர்ஷினிக்கு புரிந்திருக்க வேண்டும் இந்த திருமணம் நிலைக்காது என்று. விஜய் டிவி கொண்டாடும் ஒவ்வொரு கல்யாணமும் விவாகரத்தில் முடிவது தொடர்கதையாகி விட்டது.

divyadharshini-dd-cinemapettai

 

திருமணமான சில வருடங்களிலேயே தன்னுடைய காதல் கணவரை பிரிந்து தற்போது விவாகரத்து பெற்று தனிமையில் இருந்து வருகிறார் திவ்யதர்ஷினி. இப்படியே போனால் வாழ்க்கை மோசமாகும் என தெரிந்த திவ்யதர்ஷினியின் குடும்பத்தினர் அவசர அவசரமாக திவ்யதர்ஷினிக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தனர்.

அப்போது கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபரின் ஜாதகம் திவ்யதர்ஷினி உடன் ஒத்துப் போவதாகவும், மேலும் அவருக்கு இரண்டாவது திருமணத்தில் ஆர்வம் இருப்பதை தெரிந்து வளைத்துப் போட்டு விட்டார்களாம். இது விஜய் டிவி வட்டாரங்களில் இருந்து வெளியான செய்தி தானே தவிர அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வரவில்லை. விரைவில் திவ்யதர்ஷினி தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கலாம்.

Leave A Reply

Your email address will not be published.