13வது திருத்தச் சட்டத்தை எனது ஆட்சியில் முழுமையாக அமுல்படுத்துவேன் – யாழில் சஜித்

இன்று (02) யாழ். ஊடக அமையத்தில் நடந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போது ஒருமித்த நாட்டுக்குள் 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்வேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் பிரதமர் வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நுன் கடனினால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு சிறப்பு திட்டமொன்றினூடாக சிறப்பு சலுகைளை வழங்கும் திட்டம் உள்ளன. அதேபோன்று வடக்கு மற்றும் கிளிநொச்சி மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண பல திட்டங்களை தாம் வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

சுய தொழில் வாய்ப்புகளை உருவாக்கி அதை பலப்படுத்தும் திட்டங்களை வடக்கில் செயல்படுத்த உள்ளதாகவும், அதனால் தனி மனித குடும்ப வருவாயை அதிகரிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் , கல்வி – சுகாதாரம் ஆகியவற்றை தரம் உயர்த்துவது எமது முக்கிய குறிக்கோளாகும் என்றார் அவர்.

அதேபோல கிராம ராஜ்யம் , நகர ராஜ்யம் எனும் சங்கல்ப்பம் ஒன்றை உருவாக்குவது எமது எதிர்கால திட்டமாகும். அந்த முறையால் நாட்டில் உள்ள மக்கள் விரும்பும் விதத்தில் , தத்தமது பகுதிகளை முன்னேற்றும் வாய்ப்பை உருவாக்கிக் கொடுப்போம். அரசியல் தலையீடுகள் இல்லாமல் , மக்களே தம்மை ஆளும் நிலையொன்றை உருவாக்க எண்ணியுள்ளோம். எனவே யாழ் – கிளிநொச்சி மற்றும் வன்னி பிரேதசங்களை கேந்திரமாக்கிக் கொண்டும் தனித் தனி அபிவிருத்தி செயலணிகளை உருவாக்க திட்மிட்டுள்ளோம்.

5ம் திகதிக்கு பின் உருவாகப் போகும் எமது அரசினால் வடக்குக்கு மட்டுமல்ல , ஒட்டு மொத்த இலங்கை நாட்டுக்குமான அபிவிருத்தி பணிகளை செய்ய திட சங்கற்பம் பூண்டுள்ளோம். அதன்பின் மக்களின் எண்ணங்கள் நிறைவேறும் தலைமையை ஏற்று கடமை செய்வேன் என உறுதியளிக்கிறேன் என்றார் அவர்.

படையினரது அதிக பிரசன்னம் குறித்த ஊடகவிலாளர் ஒருவரது கேள்விக்கு பதிலளித்த சஜித் , முப்படைகளின் பணி நாட்டின் பாதுகாப்புக்கும் , பயங்கரவாதத்தை இல்லாதொழிக்கவும் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். தேர்தல் காலத்தில் பொதுவாக சட்டம் – ஒழுங்கு ஆகிவை போலீசாரால் மட்டுமே செயல்படுத்தப்பட வேண்டும். விசேடமாக தேர்தலின் போது படையினரை பாவிப்பது உசிதமான ஒரு செயல் அல்ல. அது சட்டத்துக்கு புறம்பான ஒரு செயலாகும். அது நேர் எதிரான ஒரு செயலுமாகும். எனவே முப்படைகளை நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமான அபிமானமான பணிகளில் ஈடுபடுத்தி , காவல் துறையினரை பயன்படுத்தி தேர்தல் கால பணிகளை செய்வதே மிக உசிதமானது என நான் நம்புகிறேன் என்றார் சஜித் பிரேமதாச .

கடந்த காலங்களில் ஆரம்பிக்கப்பட்ட வீடமைப்பு திட்டங்களில் பல இன்னமும் முழுமை பெறாத நிலையில் உள்ளன. நீங்கள் ஆட்சியை கைப்பற்றினால் இடை நிறுத்தப்பட்டுள்ள அத் திட்டங்களை பூரணப்படுத்துவீர்களா என ஒரு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சஜித் , நிச்சயமாக , அவற்றை மட்டுமல்ல , இந்த வீட்டு பிரச்சனை நாடெங்கும் உள்ளது .எமது இலக்கு 2025 அனைவருக்கும் ஒரு நிழல் எனும் அடிப்படையில் அனைவருக்கும் ஒரு வீடு கிடைக்க பண்ணுவேன் என்றார். அதுவே எமது அரசின் முக்கிய குறிக்கோளாக இருக்கிறது என்றார்.

தேசியப் பிரச்சனை குறித்து ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த சஜித் , தான் ஒரு நேர அட்டவனைப்படி வேலை செய்யும் ஒருவன். இப்பகுதி மக்களின் அரசியல் , பொருளாதார , சமூக , கலாச்சார தீர்வுகளை வழங்க முயல்வோம். அதிலிருந்து தப்பி செல்ல முயல மாட்டோம் என்றார்.

கருணா அம்மானின் பேச்சு குறித்தும் கருணா – கேபீ போன்றவர்கள் சுதந்திரமாக உலவும் போது சாதாரண கைதிகள் சிறையில் வாடுவது எந்தளவு நியாயம் என கேட்ட கேள்ளியொன்றுக்கு பதிலழித்த சஜித் , சட்டம் அனைவருக்கும் பொதுவானதாக இருத்தல் வேண்டும். அரசியல் ஆதாயங்கங்களுக்காகவும் , நட்புகளுக்காகவும் ஒருவருக்கு ஒரு நீதியும் , இன்னொருவருக்கு இன்னொரு நீதியும் நடைமுறைப்படுத்துவது மிக தவறானதாகும். அது அரசியல் சாசனத்துக்கு எதிரானதாகும். அதாவது நீதியும் – கடமையும் சரியாக பேணப்படவில்லை என்பதாகும். எமது அரசில் , இப்படியான இரட்டை கொள்கை நடைமுறைகளுக்கு இடமளிக்க மாட்டோம். அனைவருக்கும் ஒரேவிதமான நீதியை செயல்படுத்த திடமாக உள்ளோம் என்றார்.

உங்களோடு சில கட்சிகள் இணைய பேச்சு வார்த்தைகள் நடை பெறுவதாக அறிகிறோம் எனக் ஒருவர் கேட்ட போது , அனைத்து கட்சிகளும் இன்றைய அரசோடுதான் டீல் ஒன்றை செய்து வருகிறார்கள். நாங்கள் ஊழலற்ற – நேர்மையான – மக்களுக்கு சேவை செய்யும் ஆட்சியொன்றை உருவாக்கும் போது எம்மால் தூள்காரர்கள், திருடர்கள் , ஊழல்வாதிகள் போறோரோடு இணைய முடியாது. அப்படி இல்லாத அனைவரோடும் நாங்கள் இணைந்து செயலாற்றலாம் என்றார்.

நல்லாட்சியை நம்பிய எமக்கு இடைக்கால நிர்வாகம் ஒன்றைக் கூட தராமல் கூட்டமைப்போடு சேர்ந்து ஏமாற்றி விட்டார்கள் . ஊடகப் படுகொலைகள் கூட நடந்துள்ளன இவற்றுக்கு என்ன செய்வீர்கள் எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு , மனித இழப்பொன்று இடம் பெற்றிருந்தால் , அது நாட்டின் வடக்கா – கிழக்கா – தெற்கா – மேற்கா என்பது பிரச்சனை இல்லை. அது குறித்து முறையான விசாரணைகள் நடக்க வேண்டும். அப்படி இழப்புகள் ஏற்பட்டிருந்தால் அவர்களுக்கான நீதியும் நட்ட ஈடுகளும் வழங்கப்பட வேண்டும். அதேபோல எனக்கும் அவர்களுக்கும் உள்ள வித்தியாசம் நான் சொல்வதை செய்பவன். அடுத்தவர்கள் சொல்வதை செய்யாததற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது என்றார்.

இறுதியான கேள்விக்கு பதிலளித்தவர் , ஒருமித்த நாட்டுக்குள் 13வது சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதேயாகும். நான் 13வது திருத்தச் சட்டத்தை பாதுகாப்பேன். எனவே 13ம் திருத்தச் சட்டத்தால் உருவான மாகாணசபை செயல்பாடுகளை இப்போது இருப்பதை விட உந்துதலோடு செயல்படுத்த அனைத்தையும் செய்வேன். அதில் மாற்றம் எதையும் செய்ய நான் முனைய மாட்டேன் என சஜித் மேலும் தெரிவித்தார்.

இந்த ஊடக மாநாட்டில் யாழ். ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ். தலைமை வேட்பாளர் கணேஸ் வேலாயுதம் , ஐமச வேட்பளர்களான உமாசந்திரா பிரகாஸ் மற்றும் கிருபாகரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

வீடியோ:

Comments are closed.