BBC உலக சேவையை தமது நாட்டிற்குள் தடை செய்ய சீனா நடவடிக்கை.

BBC உலக சேவையை தமது நாட்டிற்குள் தடை செய்ய சீன ஒலிபரப்பு ஒழுங்குப்படுத்தல் சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக சீன அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

சீனாவின் உலக தொலைக்காட்சி சேவையை பிரித்தானியா கடந்த வாரம் தமது நாட்டிற்குள் ஒளிபரப்ப தடை விதித்துள்ள பின்னணியிலேயே, BBC உலக சேவைக்கு சீனா தமது நாட்டிற்குள் தடை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

BBC உலக சேவை தொலைக்காட்சி மற்றும் வானொலி விதிமுறைகளை மீறியுள்ளதாக குற்றஞ்சுமத்தியே, சீனா இந்த தடையை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீன அதிகாரிகளின் தீர்மானத்தை எண்ணி கவலையடைவதாக BBC நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.