நாட்டின் பெயரை மாற்ற வேண்டும் : உதய கம்மன்பில

தற்போது பாவனையில் உள்ள இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் பெயரை இலங்கை குடியரசு என மாற்ற வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய தலைவர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பிறகு ஜாதிக ஹெல உறுமயவினால் முன்மொழியப்பட்டுள்ள யோசனையாக இது முன்வைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பௌத்த மதத்தை இலங்கையின் அரச மதமாக மாற்ற வேண்டும் எனவும், ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீக்குவதற்கும் பொதுத் தேர்தலின் மூலம் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கும் தமது முன்மொழிவை ஜாதிக ஹெல உறுமய சமர்ப்பித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.