தற்போது உலகில் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் சர்தார் பட்டேல்.

அஹமதாபாத்தில் அமைந்துள்ள சர்தார் பட்டேல் மைதானம் தற்போது உலகில் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் ஆகும்.

இந்தியா & இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி இங்குதான் இடம்பெறவுள்ளது.

இந்த மைதானத்தில் 1 லட்சத்து 10 ஆயிரம் ரசிகர்கள் உட்கார்ந்து விளையாட்டை ரசிக்கலாம எனக் கூறப்படுகிறது.

இதற்கு முன்னர் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் என்றால் ஆஸ்திரேலியா மெர்ல்பேன் நகர் மைதானம் என்றே கருதப் பட்டு வந்தது. இந்த மைதானத்தில் சுமார் 1,00,024 ரசிகர்கள் ஒரே நேரத்தில் அமர்ந்து கிரிக்கெட் விளையாட்டை கண்டு ரசிக்கலாம் என்பது குறிப்பிடத் தக்கது. தற்போது இந்த பெருமையை முறியடிக்கும் விதமாக சர்தார் பட்டேல் கிரிக்கெட் மைதானம் சீரமைக்கப் பட்டு மறு அவதாரம் எடுத்துள்ளது. பழைய சர்தார் படேல் மைதானத்தில் வெறும் 54 ரசிகர்கள் மட்டுமே அமர முடியும்.

தற்போதுள்ள சர்தார் பட்டேல் மைதானத்தில் 1,10,000 ரசிகர்கள் அமரலாம். அதோடு விளையாட்டு வீரர்களுக்குத் தேவையான பல்வேறு வசதிகளும் இந்த மைதானத்தில் அமைக்கப் பட்டுள்ளன என்பதே சிறப்பாகக் கருதப்படுகிறது.

சுமார் 63 ஏக்கர் பரப்பளவில் ரூ.700 கோடி பட்ஜெட்டில் இந்த மைதானம் கட்டி முடிக்கப் பட்டுள்ளது. இந்த மைதானத்தின் வடிவமைப்பில் பல விளையாட்டுகளுக்கும், கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுக்கு என தனிப்பட்ட வசதிகளும் ஏற்படுத்தப் பட்டுள்ளன. 50 க்கும் மேற்பட்ட அறை, 76 கார்ப்பரேட் பெட்டிகள், 4 உடை மாற்றும் அறைகள், கிரிக்கெட் வீரர்களுக்கு 3 பயிற்சி மைதானங்கள், உள்புறமாக ஒரு பயிற்சி அகாடமி, ஒலிம்பிக் போட்டியே நடத்தும் அளவிற்கு பெரிதான ஒரு நீச்சல் குளம் ஆகியவை இந்த மைதானத்தின் சிறம்சம்ங்களாகும்.

3,000 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 10,000 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கு மைதானத்தில் பார்க்கிங் வசதிகள் செய்யப் பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத் தக்கது.

கடந்த வருடம் இந்த மைதானம் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால் ட்ரம்பால் திறந்து வைக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.