கண்டியில் படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர் மரணம்

கண்டி – ஹசலக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரயாய வைத்தியசாலைக்கு அருகில் வீடொன்றின் அறையினுள் கொடூரமாக தாக்கப்பட்டு படுகாயமடைந்திருந்த நபர் ஒருவர் மொரயாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

குறித்த இடத்தில் நபரொருவரை தாக்கி மறைத்து வைத்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் குறித்த நபரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
35 வயதுடைய மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.கொலை சம்பவம் தொடர்பில் குறித்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்

Comments are closed.