முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கைது

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று (05) காலை வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளுக்கு கேக் வெட்ட முற்பட்ட போது, கைது செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றில் முன்னிலையாகத் தவறிய குற்றச்சாட்டில் பருத்தித்துறை நீமன்றால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையின் அடிப்படையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எனினும் புலிகளின் கரும்புலிகள் நாளினை அனுஷ்டிக்க முற்படலாம் என்ற காரணத்தால் அவர் கைது செய்யப்பட்டிருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜூலை 5ம் திகதி தமிழீழ கரும்புலிகள் நாளாகும். இன்றைய தினம் நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பில் வடமராட்சியில் பெரும் பகுதிகளில் இராணுவத்தினர் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.