வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டத்திற்கு தடை

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக இன்றைய தினம் முன்னெடுக்கப்படவிருந்த கவனயீர்ப்பு போராட்டத்திற்கு நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்குபற்றுபவர்கள் கரும்புலிகள் தினத்தை நினைவு கூற இருப்பதாக ஏற்பட்டுள்ள சந்தேகத்தினை அடுத்தே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வவுனியா ஏ9 வீதியில் உள்ள அஞ்சல் அலுவலகத்திற்கு அருகாமையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் 1000 நாட்களை கடந்தும் இந்த போராட்டம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.