யாழ். இளைஞர்களை இன்று சந்திக்கின்றார் சாணக்கியன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் யாழ் மாவட்ட இளைஞர்களை சந்தித்துக் கலந்துரையாடுகின்றார்.

யாழ்ப்பாணம், நீராவியடியிலுள்ள இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் இன்று பிற்பகல் 2 மணிக்கு இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

சமகால அரசியல் தொடர்பான இளைஞர்களின் (வடலிகளின்) எதிர்பார்ப்பு எனும் தொனிப்பொருளில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெறுகின்றது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன் ஆகியோரும் கலந்துகொள்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.