காடழிப்பு நடவடிக்கைகளை உடன் நிறுத்தக் கோரி எதிரணியினர் நாடாளுமன்ற வீதியில் ஆர்ப்பாட்டம்.

இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் காடழிப்பு நடவடிக்கைளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் பத்தரமுல்லை நாடாளுமன்ற வீதியில் நடத்தப்பட்டது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

நாட்டில் இடம்பெற்று வரும் காடழிப்பு நடவடிக்கைகள் அரசின் இயலாமையைக் காட்டுகின்றது எனவும், காடழிப்பு நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

காடழிப்புக்கு எதிராக நாளை கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.