காங்கேசன்துறையில் இருந்து மஹரகமக்கு போக்குவரத்து

இலங்கை போக்குவரத்துச் சபையின் கிளிநொச்சி சாலையும், அம்பலாங்கொட சாலையும் இணைந்து காங்கேசன்துறை முதல் மஹரகம வைத்தியசாலை ஊடாக காலி வரையான புதிய பஸ் போக்குவரத்து சேவையை நேற்று (06) ஆரம்பித்துள்ளனர்.

குறித்த புதிய பேருந்து நேற்று இரவு 7.15 மணிக்கு காங்கேசன்துறையில் இருந்து உத்தியோகபூர்வமாக பயணமானது.

மஹரகம வைத்தியசாலைக்கு செல்வோரின் தேவை கருதியே பிரதானமாக குறித்த புதிய பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப நிகழ்வில் வடமாகாண பிரதான பிராந்திய முகாமையாளர் ஏ.ஆ.எப்.அமீன், வடமாகாண பிராந்திய முகாமையாளர் செயலாற்றல் ஏ.ஜே.லம்பட், வடமாகாண பிராந்திய இலங்கை போக்குவரத்து சபை பாதுகாப்பு முகாமையாளர், பிராந்திய வினியோக முகாமையாளர், பிராந்திய தொழில்நூட்ப முகாமையாளர் மற்றும் கிளிநொச்சி சாலை முகாமையாளர், தொழில்சங்க உறுப்பினர்கள், சாரதி காப்பாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்

Comments are closed.