அதிகூடிய கொரோனா தொற்றாளர்கள் – இந்தியாவிற்கு 3 ஆம் இடம்

அதிகூடிய கொரோனா தொற்றாளர்களை கொண்ட நாடுகளின் வரிசையில் இந்தியா 3 ஆவது இடத்தினை பெற்றுள்ளது.

நேற்றைய தின முடிவின்படி 23 ஆயிரத்து 932 கொரோனா தொற்றாளர்கள் ஒரே நாளில் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

இதேவேளை அடுத்த மாதம் 15 ஆம் திகதியளவில கொரோனா தொற்றாளர்களுக்கு பயன்படுத்துவதற்கான தடுப்பூசி ஒன்றை தயாரிக்க உள்ளதாக இந்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட குடும்ப உறுப்பினர்களுடன் உரையாடுவதற்கான வீடியோ தொழில்நுட்ப வசதிகளை பெற்றுக் கொடுக்க டில்லி சுகாதார பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரவிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.