மீண்டும் சு.க. ஆட்சி; அதுவே எனது இலக்கு! – கண்டியில் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்த பின் மைத்திரி சபதம்.

“மீண்டும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியை அமைப்பதே எனது எதிர்ப்பார்ப்பு. அதற்கேற்ற வகையில் கட்சி கட்டியெழுப்பப்படும்.”

இவ்வாறு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கண்டியில் இன்று, மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்த பின்னர் அங்கு நடைபெற்ற ஊடகவியலார் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

”ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சவால்களுக்கு மத்தியில் பயணித்த கட்சியாகும். மீண்டெழுவதற்கான சக்தி இந்தக் கட்சிக்கு இருக்கின்றது. 14 பேர் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்றனர். இதற்கு முன்னர் 8 எம்.பிக்கள் அங்கம் வகித்த சந்தர்ப்பமும் உள்ளது. எனவே, எதிர்காலத்தில் சுதந்திரக் கட்சி ஆட்சியை அமைப்பதே எமது எதிர்ப்பார்ப்பு.

அரசுக்கு ஆதரவு வழங்கும் அதேவேளை கட்சியைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளும் தீவிரமாக முன்னெடுக்கப்படும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.