விலைவாசி அதிகரிப்புக்கு எதிராக மனோ – ரஹ்மான் கொழும்பில் போராட்டம்!

விலைவாசி அதிகரிப்புக்கு எதிராக கொழும்பில் இன்று மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மருதானை பொலிஸ் நிலையத்துக்கு அருகாமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், “அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் மக்கள் இம்முறை தமிழ், சிங்கள புத்தாண்டை பலகாரங்களுடன் கொண்டாட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது” – என்று கூறினார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

 

Leave A Reply

Your email address will not be published.