வறுமையும் போதிய வருமானமும் இல்லாதன் காரணமாக மனைவியை கொன்று கணவனும் தற்கொலை.

கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் இறுதியில் கோர சம்பவமாக முடிவடைந்துள்ளது.

கிளிநொச்சி கண்டாவளை சிவபுரத்தில் வாழ்ந்து வந்த மூன்று பிள்ளைகளின் தந்தையும் தாயும் நேற்றைய தினம் பிணமாக காணப்பட்டனர்.

மனைவியோடு ஏற்பட்ட வாய்தர்க்கம் . இதனால் ஆத்திரமடைந்த கணவன் கோபத்தை அடக்க முடியாமல் அன்பு மனைவியின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

மனைவி இறந்த சோகத்தில் தான் வாங்கி கொடுத்து மனைவி விரும்பி கட்டும் சேலையை கழுத்தில் கட்டி கொண்டி தனது உயிரை மாய்த்து கொண்டார்.

இச் சம்பவம் நேற்று (01) நண்பகல் இடம்பெற்றுள்ளது என அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

குடும்ப தகராறு காரணமாக சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தரப்பு கூறுகிறது.

இச் சம்பவத்தில் 38 வயதுடைய
வேலாயுதம் சிவஞானம் என்பவரும் அவரது மனைவியான 36 வயதுடைய சிவஞானம்
குகனேஸ்வரி என்வரும் இறந்துள்ளனர்.

வறுமையின் கொடுமையும் போதிய வறுமானமும் இல்லாதன் காரணமாக விரகத்தி அடைந்த கணவன் இந்த செயலை செய்து இருக்கலாம் என அந்த பகுதியில் வாழும் மக்கள் சொல்கிறார்கள்.

இவர்களுக்கு 16 வயதில் மகளும், 13 மற்றும் 06 வயதில் இரணடு மகன்களும்
உள்ளனனர்.

இவர்களின் இந்த நிலையில் மூன்று பிள்ளைகளும் நிர்கதிக்குள்ளாகியுள்ளனர்.

பொலீஸ் மேதிலக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.