முச்சக்கர வண்டி மோட்டார் சைக்கிள் விபத்து!

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உட்துறைமுக வீதியில் இன்று (3) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்த மூவரும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிள் ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதுடன் விபத்தில் இரு வாகனங்களும் சேதமடைந்துள்ளன.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

விபத்தில் முச்சக்கரவண்டி சாரதியான திருகோணமலை – ஜமாலியா, நெல்சன் புறபகுதியைச் சேர்ந்த பரீஸ்தீன் (37 வயது) மற்றும் மோட்டார் சைக்கிளில் பயணித்த உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஆனந்தபுரி பகுதியை சேர்ந்த 19 வயதுடைய இரு இளைஞர்கள் ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.