என்ஜாய் எஞ்சாமி பாடல் 28 நாட்களிலேயே 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

ஒரு மாசம் கூட ஆகல அதுக்குள்ள 100 மில்லியன் வியூஸ்.. பட்டித் தொட்டி எங்கும் என்ஜாய் எஞ்சாமி தான்!

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தயாரிப்பில் தீ மற்றும் அறிவு பாடி ஆடியுள்ள என்ஜாய் எஞ்சாமி பாடல் தான் பட்டித் தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வருகிறது.

கடந்த மார்ச் 7ம் தேதி யூடியூப் தளத்தில் வெளியான இந்த பாடல் வெறும் 28 நாட்களிலேயே 100 மில்லியன் பார்வைகளை கடந்து மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மயக்கும் விதமாகவும், ஆழமான கருத்துக்களையும் உள்ளடக்கி உருவாகி இருக்கிறது இந்த பாடல்வெளிநாட்டு ஆல்பம் பாடல்களை போல அருமையான மேக்கிங்கில் நம்ம ஊரு கிராமத்தையும் மண் மனத்தையும் சேர்த்து தெருக்குரல் அறிவு மற்றும் தீ இணைந்து ஆடி பாடி உள்ள இந்த என்ஜாய் எஞ்சாமி கேட்பவர்களை அடுத்த நொடியே ஈர்ப்பது போல அமைந்துள்ளது. இயக்குநர் அமித் கிருஷ்ணா இயக்கத்தில் ஆல்பம் பாடல் மிகவும் அற்புதமாக உருவாகி உள்ளது.

தமிழ்நாட்டின் பாரம்பரியமான பறை இசையை அடிநாதமாக கொண்டு இந்த பாடலை உருவாக்கி உள்ளனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கனெக்ட் செய்யும் விதமாக அழகான மற்றும் ஆழமான பாடல் வரிகளை அறிவு எழுதி தீ உடன் இணைந்து பாடியுள்ளார். ஆரம்பத்தில் காட்டும் மண் அதிரும் காட்சிகளும் பாடலின் வெற்றியை உறுதி செய்துள்ளது.

பாடகி தீ பாடும் பாடல்கள் எல்லாமே சர்வ சாதாரணமாக 100 மில்லியன் பார்வைகளை கடந்து படு வைரலாகி வருகின்றன. தனுஷ் உடன் இணைந்து இவர் பாடிய ரவுடி பேபி பாடல் 1000 மில்லியன் பார்வைகளை கடந்து வைரலானது குறிப்பிடத்தக்கது. சூரரைப் போற்று படத்திற்காக இவர் பாடிய காட்டுப் பயலே பாட்டும் வேற லெவல் ஹிட் அடித்தது.

Leave A Reply

Your email address will not be published.