‘சில நாட்களுக்குள்’ டிக்டோக் ஹாங்காங்கிலிருந்து வெளியேறுகிறது

சீனா , நகரத்தின் மீது புதிய பாதுகாப்புச் சட்டத்தை விதித்த பின்னர் டிக்டோக் ஹாங்காங்கிலிருந்து வெளியேறுவதாக தெரிவித்துள்ளது.

“சமீபத்திய நிகழ்வுகளின் வெளிச்சத்தில், ஹாங்காங்கில் டிக்டோக் பயன்பாட்டின் செயல்பாடுகளை நிறுத்த முடிவு செய்துள்ளோம்” என்று செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் கூற்றின்படி, டிக் டொக் ஹாங்காங் நகரத்திலிருந்து வெளியேறுவது “சில நாட்களுக்குள்” வரும்.

பேஸ்புக் மற்றும் ட்விட்டர் இந்த வாரம் பயனர் தகவல்கள் தொடர்பாக ஹாங்காங் போலீசாருடன் ஒத்துழைப்பதை “இடைநிறுத்துகின்றன” என்று தெரிவித்துள்ளன.

Comments are closed.