இலஞ்சம் வாங்கிய வன பாதுகாப்பு அதிகாரி கைது

அனுராதபுரம் – கஹடகஸ்திகிலிய பகுதியில் உள்ள வன பாதுகாப்பு அதிகாரி ஒருவரை இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டின் பேரில் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவினர் இன்று (07) கைது செய்துள்ளனர்.

நபரொருவர் அவரது நிலத்தில் மாத்திரமின்றி அதற்கு அருகிலுள்ள அரச நிலத்திலும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டதைத் தொடர்ந்து, குறித்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காது அவரிடமிருந்து (25) ஆயிரம் ரூபாவை மேற்படி வன பாதுகாப்பு அதிகாரி இலஞ்சமாக பெற்றுள்ளார்.

குறித்த வன பாதுகாப்பு அதிகாரி முன்னர் 07 ஆயிரம் ரூபாய் பெற்றிருந்த நிலையில், மீதமுள்ள 13 ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொண்டிருந்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

 

இந்நிலையில் சந்தேக நபரை அனுராதபுரம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Comments are closed.