கதலி வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை.

கதலி வாழைப்பழங்களை பழ வகைகளில் ஒன்றாக ஏற்றுமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன் மூலம் கதலி வாழைப்பழங்களுக்கான சந்தையில் கேள்வி அதிகரிப்பதுடன், விவசாயிகளுக்கு ஆகக்கூடிய விலையும் கிடைக்கும் என்று விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

இராஜாங்கனைப் பிரதேசத்தில் பத்து ஏக்கரில் வாழை பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த பயிர்ச்செய்கையை கண்காணிக்கும் நோக்குடன் விவசாய அமைச்சர் மற்றும் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன ஆகியோர் சமீபத்தில் அப்பிரதேசத்திற்கு சென்றிருந்தனர்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இவ்வாறு, பாரிய அளவில் கதலி வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்யும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். அத்துடன் வாழைப்பழ ஏற்றுமதி திட்டத்தின் முதலாவது படிமுறை இராஜாங்கனையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

Leave A Reply

Your email address will not be published.