சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்புக்கான வட்டி விகித்தத்தில் மாற்றமில்லை – நிதியமைச்சு

சிரேஷ்ட பிரஜைகளுக்கான சேமிப்பிற்காக செலுத்தப்படும் வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லையென நிதி மைச்சு அறிவித்துள்ளது.

இதுவரை வழங்கப்பட்ட வட்டி விகிதம் தொடர்ந்தும் அதே விதத்தில் வழங்கப்படும எனவும் நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தற்போதைய சிரேஷ்ட பிரஜைகள் இளைஞர்களாக இருக்கும் போது அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக நாட்டிற்கு வழங்கிய அர்ப்பணிப்பிற்காகவே இந்த வட்டி விகித திட்டம் 2014 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றது.

எனினும் இந்த விசேட வட்டி விகிதத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் வெளிவரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானமை என எனவும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

சிரேஷ்ட பிரஜைகளுக்கான வரப்பிரசாதங்கள் எவ்வித்திலும் மறுசீரமைக்கப்படவில்லையென தெரிவித்துள்ள நிதியமைச்சு அந்நடவடிக்கைகள் அதே விதமாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமென குறிப்பிட்டுள்ளது.

Comments are closed.