நுவரெலியா இளைஞர் மாநாட்டில் சாணக்கியன் சிறப்புரை!

மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் அமைப்பான மலையக இளைஞர் முன்னணியின் மாநாடு நாளை (17) காலை 10 மணிக்கு நுவரெலியா சினிசிட்டா அரங்கில் நடைபெறவுள்ளது.

மலையக மக்கள் முன்னணியின் தலைவர் கலாநிதி வே.இராதாகிருஷ்ணன் எம்.பி. தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சிறப்புரையாற்றவுள்ளார்.

மலையக மக்கள் முன்னணியின் நிதிச்செயலாளர் தனது முகநூல் பக்கத்தில் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.