கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரிப்பு.

கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரிப்பு- பதுடில்லி மயானத்தில் உடல்களை புதைப்பதற்கு இடமில்லாத அவலம்.

கொரோனா வைரசினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளதன் காரணமாக புதுடில்லி மயானங்களில் பெரும் இடநெருக்கடி தோன்றியுள்ளது.

புதுடில்லியில் அம்புலன்சிலிருந்து தனது தந்தையின் உடல் எடுத்துச்செல்லப்பட்டு அவசரஅவசரமாக தோண்டப்பட்ட குழியில் வைக்கப்படுவதை பார்த்து இளைஞர் ஒருவர் மண்ணில் கையால் அடித்து கதறுகின்றார்.
நீங்கள் என்னை வெளியே செல்லவேண்டாம் என தெரிவித்தீர்கள் நான் கேட்கவில்லை இது எனது தவறு என்னை மன்னித்துவிடுங்கள் என அவர் கதறுகின்றார்.

புதுடில்லியின் முஸ்லீம்களிற்கான பிரதான மையவாடியில் உடல்களை அடக்கம் செய்வதற்கான இடமில்லாத நிலை உருவாகிவருகின்றது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

உள்ள மயானத்திற்கு அம்புலன்ஸ்கள் வருவதை காணமுடிகின்றது. கடந்த வருடம் கொரோனா வைரசினை தொடர்ந்து வெற்றுநிலமாக காணப்பட்ட பகுதி மாயானமாக மாற்றப்பட்டது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை நீண்டிருக்கின்ற புதைகுழிகள் ,இடமின்மையால் மயானத்தின் எல்லை சுவர் வரை நீள்கின்றன.
மயானத்தின் தலைமை நிர்வாகி முகமட் சமீம் தற்போது உடல்களை திருப்பி அனுப்பவேண்டிய நிலைக்கு தான் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றார்.

இடமுமில்லை கையாள்வதற்கு போதிய ஆட்களுமில்லை என அவர் தெரிவிக்கின்றார்.
கடந்த புதன்கிழமை 19 உடல்கள் வந்தன நான்கை திருப்பி அனுப்பிவிட்டோம் என அவர் தெரிவிக்கின்றார்.

முகக்கவசங்களை அணியாத குடும்பத்தவர்கள் உடல்களை பெட்டியில் கொண்டு செல்வதை அல்லது வெள்ளை துணியில் சுற்றி கொண்டு செல்வதை காணக்கூடியதாகவுள்ளது

பப்பு அலி என்பவர்(43) கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டமை உறுதியானதை தொடர்ந்து அவரை மருத்துவமனையொன்றில் அனுமதிப்பதற்கு அவரது குடும்பத்தவர்கள் பெரும் நெருக்கடியை சந்தித்தனர் – அவர்கள் பல மருத்துவமனைகளிற்கு சென்றனர்
இறுதியாக அரசமருததுவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்தார்.

போதியளவு மருத்துவர்கள் இருக்கவில்லை என அவரது உடல் மண்ணில் புதைக்கப்பட்ட பின்னர் அவரது உறவினர் ஒருவர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.