திருமலைக்கு வராதீர்கள்! – வலியுறுத்துகின்றார் ஆளுநர்

கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயத்தை சுகாதாரத்துறை அடையாளம் கண்டுள்ளதால் திருகோணமலை மாவட்டத்துக்கு வருவதைத் தவிர்க்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் பொதுமக்களிடம் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

வீதித் தடைகளைத் தவிர்த்து பிற நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் குறைக்குமாறு ஆளுநர் இன்று பாதுகாப்புப் படையினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை, திருகோணமலையில் விசேட பாதுகாப்புத் திட்டத்தை எதிர்காலத்தில் செயற்படுத்துமாறும் பாதுகாப்புப் படையினரிடம் ஆளுநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறும் அனைவர் தொடர்பிலும் சட்டத்தைக் கடுமையாக அமுல்படுத்துமாறும் ஆளுநர், பாதுகாப்பு படையினருக்கு இதன்போது உத்தரவிட்டுள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தில் சிறுநீரக நோயாளிகள் பதிவாகியுள்ள கோமரங்கடவல மற்றும் பதவிஸ்ரீபுர பகுதிகளில் இருந்து திருகோணமலைக்கு வருபவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.

சிறுநீரக நோயாளிகளுக்குக் கொரோனாத் தொற்றுப் பரவல் மிக வேகமாக இருப்பதை சுகாதாரத் துறை வெளிப்படுத்தியுள்ளதால் ஆளுநர் இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.