கந்தக்காட்டில் 196 பேருக்கு கொரோனா

கந்தக்காடு போதை பாவினையிலிருந்து புனர்வாழ்வு அளிக்கும் நிலையத்திலிருந்த 338 உள்ளோரது பீசீஆர் பரிசோதனை முடிவுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

அங்கு 196 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதே முகாமில் நேற்றைய தினம் கண்டு பிடிக்கப்பட்ட 56 பேருடன் இப்போதைக்கு 252 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

அங்குள்ள மேலும் பலருக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என சுகாதார பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

புத்தளம் மாவட்டத்தின் மாறவில பகுதியில் வாழும் புனர்வாழ்வு மையத்தின் பெண் ஊழியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமையால் அப்பகுதியில் உள்ள 10 வீடுகளில் வசிக்கும் சுமார் 40 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Comments are closed.