உபவேந்தர் பதவிக்கான வெற்றிடங்களை விரைவில் நிரப்படும் – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு

  • நாட்டில் 7 பல்கலைக்கழகங்களில் நிலவும் உபவேந்தர் பதவிக்கான வெற்றிடங்களை விரைவில் நிரப்பவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்காக தகைமையுடையோரிடமிருந்து விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதுடன், நேர்முகத் தேர்வுகளையும் நடத்தவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் கலாநிதி ஜனிதா லியனகே தெரிவித்தார்.

எவ்வாறாயினும், பொதுத்தேர்தல் காரணமாக தேர்தல் சட்டதிட்டங்களின் அடிப்படையில் நேர்முகத் தேர்வை நடத்தல் அல்லது சேவைக்கு எவரையும் இணைத்துக்கொள்வதற்கான வாய்ப்புகள் இல்லையென அவர் குறிப்பிட்டார்.

இதனடிப்படையில், பொதுத் தேர்தலின் பின்னர் உபவேந்தர் பதவிக்கான நேர்முகத் தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம், களனி பல்கலைக்கழகம், ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம், சப்ரகமுவ பல்கலைக்கழகம் உள்ளிட்ட 7 பல்கலைக்கழகங்களில் உப வேந்தர்களுக்கான வெற்றிடம் நிலவுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Comments are closed.