ஊடகவியலாளரை அச்சுறுத்திய முன்னாள் பொலிஸ் அதிகாரி

கொழும்பு நீதிமன்ற வளாகத்துக்குள் தன்னை புகைப்படம் எடுக்க முயன்ற ஊடகவியலாளர் ஒருவரை வெலிக்கடை சிறைச்சாலை படுகொலையின் பிரதான சந்தேக நபரான முன்னாள் போதைப் பொருள் தடுப்பு பணியக பொலிஸ் பொறுப்பதிகாரி நியோமல் ரங்கஜீவா பலவந்தமாக இழுத்து சென்று பொலிஸில் ஒப்படைத்துள்ளார்.

வெலிக்கடை படுகொலை வழக்கில் இன்று (10) மதியம் ஆஜரான போதே ரங்கஜீவாவை ஊடகவியலாளர் புகைப்படம் எடுக்க முயன்றுள்ளார்.

இதன்போது அவரது பணிக்கு இடையூறை ஏற்படுத்திங ரங்கஜீவா குறித்த ஊடகவியலாளரை இழுத்து சென்றுள்ளார்.

தான் ஊடகவியலாளர் என்று தன்னை அடையாளப்படுத்திய போது இவ்வாறு ரங்கஜீவா செயற்பட்டதாக ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் சோதனை சாவடியில் வைத்து தனது கமராவில் இருந்த மெமரி சிப்பினையும் அவர் எடுத்து கொண்டதாக ஊடகவியலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments are closed.