கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கு 8வது இடம் : ஏனைய கட்சிகள் எத்தனையாவது இடம்?

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கு 8வது இடம்

கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி, நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் 2.45 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளது.

தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி 154 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய ஜனநாயக கட்சி தலா 40 இடங்களிலும் சமத்துவ மக்கள் கட்சி தலா 40 இடங்களிலும் போட்டியிட்டன. ஆனால் ஒரு இடத்திலும் அந்த கட்சி வெற்றிபெற முடியவில்லை.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

அதேநேரம், 2.45 சதவீதம் வாக்குகளை அக்கட்சி பெற்றுள்ளது.

வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் இது, 10,58,847 ஆகும். அதாவது வாக்கு சதவீதம் அடிப்படையில் 8வது இடத்தில் அந்த கட்சி உள்ளது.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சி, 2.47 சதவீதம் ஓட்டுக்களை பெற்று 7வது இடத்தில் உள்ளது.

திமுக, அதிமுக
நடைபெற்ற சட்டசபை தேர்தலில், திமுகவின் வாக்கு வங்கி 37.7 சதவீதமாக இருந்தது. அதிமுகவில் 33.29 சதவீத வாக்குகளும், காங்கிரஸ் 4.3 சதவீத வாக்குகளும் பெற்றன. பாட்டாளி மக்கள் கட்சி 3.81 சதவீத வாக்குகளைப் பெற்று 4வது இடத்தில் உள்ளது. பாஜகவின் வாக்குப் பங்கு 2.63 சதவீதமாகவும், மற்றவர்கள் 14.5 சதவீதமாகவும் உள்ளது.

நாம் தமிழர்
நாம் தமிழர் 6.85 சதவீதம் ஓட்டுக்களை பெற்றுள்ளனர். ஏனெனில் இந்த கட்சி 234 தொகுதிகளிலும் போட்டியிட்டது. பல இடங்களில் 3வது இடத்தை பிடித்துள்ளது.


நோட்டா
0.07 சதவீதம் பேர் நோட்டாவுக்கு ஓட்டுப்போட்டுள்ளனர். அதாவது 3,45,349 பேர் நோட்டாவுக்கு ஓட்டுப் போட்டுள்ளனர். தேமுதிக 0.43 சதவீதம் ஓட்டுக்களை மட்டுமே பெற்றுள்ளது.
(நோட்டா – NOTA – ஆங்கில சொல்லின் விரிவாக்கம் None of The Above என்பதாகும். இதன் பொருள் “மேலே உள்ள எவரும் அல்ல” என்பதாகும்.)

ஓட்டுக்கள்
திமுக 17,418503 வாக்குகளைப் பெற்றது,

அதிமுக 15,384,907 வாக்குகளைப் பெற்றது.

காங்கிரஸ் 1,976,527 வாக்குகளையும்,

பாஜக 1,213510 வாக்குகளையும் பெற்றது.

Leave A Reply

Your email address will not be published.