நெற்றியில் பட்டையடித்து பொட்டு வைத்து விக்னேஸ்வரன் மீன் சின்னத்தில் தேர்தலில் நிற்பது கவலையளிக்கிறது

தமிழ் தேசியத்திற்கான வாக்குவங்கி உடைவதற்கான சாத்தியக்கூறு காணப்படுகின்றது. சைக்கிள் சின்னத்துக்கும், மீன் சீன்னத்துக்கும் வாக்குகள் பிரிந்து செல்லப் போகின்றது. நெற்றியில் பட்டையை  போட்டு  பொட்டை வைத்துக் கொண்டு முன்னாள் வடக்கு முதலமைச்சர் மீனுக்கு வாக்களிக்குமாறு  சொல்கின்றாரே என்பது கவலையளிக்கிறது என  வடக்கு மாகாண முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் தவராசா தெரிவித்தார்.

யாழ் ஊடக மன்றத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

மழைக்காலத்தில் ஈசல்கள் வருவதைப் போல தேர்தல் காலங்களில் புதிய வேட்பாளர்கள் வந்துள்ளனர். அவர்கள் தமது பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். யுத்தம் முடிவடைந்த காலத்தில் இருந்து இன்று வரை கூட்ட்டமைப்பு மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கியது. குறிப்பிட்ட காலத்துக்குகுள்  அரசியல் தீர்வு என்டார்கள். பின்னர் தீர்வு  கிடைக்காது விட்டால் போராட்டம் வெடிக்கும் என்றார்கள். 2011ல் இருந்து சர்வதேசத்துக்கு எங்களின் பிரச்சனைகளை எடுத்துச் சொல்ல எங்களுக்கு வாக்களியுங்கள் என்றார்கள். இதுவரை எமது பிரச்சனைகளை சர்வதேசத்துக்கு சொன்னார்களா என்றுகூட தெரியவில்லை.

கடந்த மாகாணசபைத் தேர்தலில் இராணுவத்தை வடக்கில் இருந்து முற்றாக வெளியேற்றுவதற்கு வாக்களியுங்கள் என்றார்கள். அமெரிக்க ஜனாதிபதியோடும், பிரித்தானிய பிரதமரோடும் கதைக்க கூடிய வல்லமை உடையவரை வடக்கு முதலமைச்சர் ஆக்குங்கள் என்றார்கள். இறுதியில் அந்த வடக்கு முதல்வர் எதையும் மேற்கொள்ளது அனைவரது நேரத்தையும் வீனடித்தார். மேலும் கடந்த காலங்களில் சர்வதேசத்திடம் இருந்து தீர்வை பெற்று தருவதாக கூறினார்கள் பின்னர் நல்லாட்சியில் தீர்வு  உறுதி என்டார்கள் இபோது சுயநிர்னயம் என தேர்தல்கால  உனர்ச்சி  கோஷங்களை எழுப்புகின்றார்கள்.

இவர்கள் ஒருபுறம் இருக்க இன்னொரு தரப்பினர் இருதேசம்  ஒரு நாடு என்று கூறிக்கொன்டு திரிகின்றனர். இரு தேசம் என்ற கோட்பாட்டினை ஈரோஸ் அமைப்பை சேர்ந்த அருளர் என்பவரே முதலில் முன்வைத்தார். தற்போது அந்த கோட்பாட்டினை முன்ணணியினர் கையில் எடுத்துள்ளனர். அவர்களிடத்தில் பல சட்டத்தரணிகள் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.

சட்டதரணிகள் தங்களின் தொழில் நிமிர்த்தம் அரசியலமைப்பின் 6ம் சரத்தின் படி இலங்கையின் அரசியலமைப்பை பாதுகாப்பேன் என உறுதிமொழி அளிக்க வேண்டும். ஒற்றையாட்சி அரசியலமைப்பை பாதுகாப்பேன் என சத்தியபிரமாணம் செய்துவிட்டு மக்களிடம் இருதேசம் என்கிறார்கள்.

இதற்க்கு அடுத்ததாக முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தலைமையிலான அணியினர் இம்முறை பாராளுமனறத்தில் போட்டியிடுகின்றார்கள். கடந்த காலங்களில் மாகாண சபைகளின் செயற்படுகளை முடக்கி கிடைத்த அதிகாரங்களை முழுமையாக செயற்பட விடாமல் தடுத்தனர். வடக்கு மாகாண கல்வி வீழ்ச்சியடைந்ததற்கு இவர்களே காரணம்.

இலங்கையின் சரித்திரத்தில் முதல் தடவையாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி  யாழ்ப்பாணம் வந்தபோது அப்போதய முதலமைச்சராக இருந்த விக்கினேஸ்வரன் பிரேமானந்த சுவாமியுடன் கைதாகிய சகாக்களை விடுவிக்குமாறு கடிதம் ஒன்றை வழங்கினார். வடக்கு மக்களின் பிரச்சனைகளை எடுத்து கூறாமல் தேவையற்ற கோரிக்கைகளை விடுத்தார்.

மாகாணசபைக்கு கிடைத்த அதிகாரங்களை வினைத்திறனாக பயன்படுத்தாமல் வெறுமனே பிரேரணைகளை மட்டும் நிறைவேற்றி  மாகாணசபையை  செயலாற்ற ஒன்றாக மாற்றியவர்கள் தான் இன்று நாடாளுமனறத்தில் சாதிக்க போவதாக கூறுகின்றனர். தமிழ் மக்களின் உரிமைப் பிரகடனம் நிகழ்ந்த வாட்டுக்கோட்டையில் தமது கட்சியின் கொள்கை பிரகடனத்தை வெளியிடுகின்றனர்.

தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தினை வென்றெடுப்பதற்கு 20ற்கும் மேற்பட்ட இயக்கங்கள் சரி பிழைகளுக்கு அப்பால் போராடின. இவர்கள் எதுவிதமான போராட்ட்ங்களிலும் ஈடுபடாது தம்பி பிரபா என்று அரசியல் செய்வதற்கு இவர்களுக்கு என்ன தகுதி  உள்ளது. இந் நிலையில் தமிழ் மக்கள் உணர்ச்சி வசப்படாது  யதார்த பூர்வமான நிலையில் சிந்தித்து தமது பிரதிநிதிகளை தெரிவு செய்ய வேண்டும்.

மேத்தானந்த தேரரின் கருத்து பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளது. அது அவரது தனிப்பட்ட கருத்தே ஒழியே ஒட்டுமொத்த சிங்கள மக்களின் கருத்து அல்ல. இவைகளுக்கு  அடிப்படை காரணம்  இலங்கை இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக அமுல்படுத்தாது புறக்கணித்து ஆகும். இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் என ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். அதனை புறக்கணித்துவிட்டு  இப்போது சிங்களவர்கள் எமது பிரதேசங்களை சொந்தம் கொண்டாடுகின்றனர் என புலம்புவதில் எதுவித அர்த்தமும் இல்லை என்றார்

Comments are closed.