ஊடகவியலாளர் அச்சுறுத்தலைக் கண்டித்து மட்டக்களப்பில் ஆர்பாட்டம்

ஒளிப்பட ஊடகவியலாளர் அகில ஜயவர்த்தன முன்னாள் ஓஐசியினால் அச்சுறுத்தப்பட்டதை கண்டித்து இன்று (11) மட்டக்களப்பு – காந்தி பூங்கா முன்னால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஒளிப்பட ஊடகவியலாளர் அகில ஜயவர்த்தனவை வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை சந்தேக நபரான போதைப் பொருள் தடுப்புப் பணியக முன்னாள் பொலிஸ் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவவினால் அச்சுறுத்தப்பட்டு இழுத்து செல்லப்பட்டிருந்தார்.

இதனைக் கண்டித்து இடம்பெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், கலந்துகொண்டனர்.

இதன்போது, ‘ஊடக சுதந்திரம் வேண்டும்’, ‘ஊடகவியலாளரை அச்சுறுத்திய பொலிஸாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்’, ‘ஊடகவியலாளரின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்’ என ஊடகங்களுக்கெதிரான நெருக்குதல்கள் தொடர்பிலான கோசங்களை எழுப்பியவாறும் பதாதைகளை ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது

Comments are closed.