வீட்டில் வைத்து சிகிச்சை வழங்க அரசு திட்டம்.

அறிகுறிகளை வெளிப்படுத்தாத கொரோனா வைரஸ் தொற்றாளர்களை வீட்டில் வைத்து சிகிச்சை அளிப்பது தொடர்பில் அரசு கவனம் செலுத்தி வருகின்றது ஒளடத உற்பத்திகள், வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

கொரோனாத் தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்குவது குறித்த முறையான திட்டத்தை அரசு செயற்படுத்தி வருகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போது நாட்டில் ஏராளமான கொரோனாத் தொற்றாளர்கள் வீடுகளில் இருக்கின்றனர் எனவும், அவர்களுக்கு மருத்துவமனை வசதிகளை வழங்குவதற்குத் தாம் முயற்சித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

எதிர்காலத்தில் அறிகுறிகள் இல்லாத நோயாளிகளை வீடுகளில் வைத்து அவதானிப்பதோடு, அவர்களுக்கு அவசர சிகிச்சை தேவைப்பட்டால் மட்டும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்வது குறித்து பரிசீலித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கர்ப்பிணித் தாய்மார்களுக்குப் பொருத்தமான தடுப்பூசியைப் பெற்றுக்கொடுப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.