கூட்டமைப்பை 2ஆம் இடத்துக்குத் தள்ளி யாழில் சாதனை படைக்கும் விக்கி அணி : சிவாஜிலிங்கம்

“ஆகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி அதிக ஆசங்களைக் கைப்பற்றி சாதனை படைக்கும்.”

– இவ்வாறு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் யாழ்ப்பாணம் மாவட்ட வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இம்முறை யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கிடையில் மும்முனைப் போட்டி நிலவுகின்றது. எனினும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்று முதலிடத்தைத் தனதாக்கும்.

அதனூடாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இரண்டாவது இடத்துக்கு தள்ளுவோம். இந்த உறுதியான நம்பிக்கை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

அதேவேளை, எமது மாபெரும் கூட்டணியில் இணைந்துகொள்ளாமல் தனியாகப் போட்டியிடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி படுதோல்வியடையும்” – என்றார்

Comments are closed.