மாற்றுத் தலைமைக்கான அங்கீகாரத்தை பொதுத்தேர்தலில் வழங்குவர் : சிவசக்தி ஆனந்தன்

மாற்றம் ஒன்றைத் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் மீனின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இம்முறை பொதுத்தேர்தலில் வன்னி மாவட்டத்தில் மீன் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி குறைந்தது இரண்டு ஆசனங்களையாவது நிச்சயம் கைப்பற்றும்.

அதற்கான வேலைத்திட்டங்களை நாம் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றோம்.

உட்கட்சி முரண்பாடுகள் காரணமாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று சின்னாபின்னமாக்கப்பட்டு செயலிழந்து காணப்படுகின்றது.

இதனால் மாற்றுத் தலைமை ஒன்று தேவையாகவுள்ளது. அதற்கான வகிபாகம் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியையே சாரும். இந்தநிலையில், அதற்கான அங்கீகாரத்தை பொதுத்தேர்தலில் தமிழ் மக்கள் கட்டாயம் வழங்குவார்கள் நின்றே நாம நம்புகின்றோம்” – என்றார்.

Comments are closed.