‘எதிர்க்கட்சியில் இருந்து ‘சுவாசம்’ திட்டம் தலைவர் சஜித் தலைமையில் ஆரம்பம்!

இலங்கையிலுள்ள மருத்துவமனைகளில் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் இந்தத் திட்டத்துக்கு ‘எதிர்க்கட்சியில் இருந்து சுவாசம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, மருத்துவமனைகளில் சுகாதார வசதிகள் குறைவடைந்து வருகின்றது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

ஐக்கிய மக்கள் சக்தி மருத்துவமனைகளுக்கு சுகாதார உபகரணங்களை வழங்கி வந்தது எனவும், அதன் புதியதொரு திட்டமே நேற்று கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது எனவும் எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.