வடமராட்சி கடலில் சட்டவிரோதமாக கடலட்டை பிடித்த 11 பேர் கைது!

யாழ்., வடமராட்சி கடற்பரப்பில் சட்டத்துக்குப் புறம்பாகக் கடலட்டை பிடித்த 11 மீனவர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மன்னாரைச் சேர்ந்த 25 வயது தொடக்கம் 35 வயதுக்குட்பட்டவர்களே இன்று இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

கடலட்டை தொழில் இடம்பெறுவதாகக் கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் தொழிலில் ஈடுபட்டவர்களிடம் அனுமதிப் பத்திரம் இருக்கவில்லை. அதனால் சட்டத்துக்குப் புறம்பாக கடலட்டை பிடித்த குற்றச்சாட்டில் 11 மீனவர்களும் கடற்படையினரின் உதவியுடன் கைது செய்யப்பட்டனர். தொழிலுக்குப் பயன்படுத்திய 4 படகுகளும் கைப்பற்றப்பட்டன.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

கைதான மீனவர்கள் 11 பேரையும் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.