தமிழ் அரசியல்வாதிகளின் கபடத்தனத்தை பிரசார மேடையில் அம்பலமாக்கிய கணேஸ்! (Video)

தமிழ் அரசியல்வாதிகள் மக்களுக்கு போலியான வாக்குறுதிகளை வழங்கியுள்ளார்களே தவிர அவர்களை பாதுகாக்கும் விதத்தில் எவ்விதமான பணிகளையும் முன்னெடுக்கவில்லையென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற வேட்பாளர் கணேஸ் வேலாயுதம் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டமொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தேர்தல் காலத்தில் மாத்திரமே தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பில் இவர்களால் கவனம் செலுத்தப்படுகிறது.

தமிழ் மக்களின் அபிவிருத்தி தொடர்பில் கவனம் செலுத்தினால் அரசியல் தீர்வு மழுங்கடிக்கப்படும் என்று கூட்டமைப்பினர் அரசாங்கத்தில் இருந்து அனைத்து வரப்பிரசாதங்களையும் பெற்றுக் கொண்டு சுகபோகமாகவே வாழ்கின்றார்கள்.

இதேவேளை அரசியல் தீர்வு என்பதொன்றை குறிப்பிட்டுக் கொண்டு தமிழ் மக்களை தொடர்ந்து நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளார்கள் என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், (அவரது முழுமையான பேச்சு வீடியோவில்)

Thanks : IBC

Comments are closed.