கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணையச் சட்டமூலம் மாபெரும் பேரழிவு – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் எச்சரிக்கை

“அரசின் கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணையச் சட்டமூலம் மிகப் பெரிய பேரழிவு ஆகும்.”

– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

நாட்டின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் வகையில் இந்தச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

தனியார் ஊடகமொன்றின் அரசியல் நிகழ்வில் கலந்துகொண்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“துறைமுக நகரம் உலகின் புகழ்பெற்ற மையமாக மாற்றப்பட வேண்டும். இதற்கிடையில், நாட்டின் நலன்களைப் பாதுகாக்கும் ‘ஸ்மார்ட்’ வெளியுறவுக் கொள்கையை இலங்கை கொண்டிருக்க வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.