இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கொரோனா நெருக்கடி காரணமாக நடைமுறையில் உள்ள சுகாதார வழிமுறைகளைக் கருத்தில்கொண்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, நாளாந்தச் செயற்பாடுகளைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பதற்குத் தீர்மானித்துள்ளது என அறிவித்துள்ளது.

பொதுமக்களின் நலனைக் கருத்தில்கொண்டு இந்தத் தீர்மானம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவால் எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய கொழும்பிலுள்ள பிரதான காரியாலயம், அநுராதபுரம் , அம்பாறை, மட்டக்களப்பு, பதுளை, கண்டி, கல்முனை, யாழ்ப்பாணம், மாத்தறை, வவுனியா மற்றும் திருகோணமலை ஆகிய காரியாலயங்களுக்கு முறைப்பாடுகளை அனுப்பி வைக்குமாறும் மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.