புதிய அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற புதிய இளைஞர் அணி அவசியம் – அநுரகுமார திசாநாயக்க

புதிய அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற புதிய இளைஞர் அணியை உருவாக்க வேண்டுமென தேசிய மக்கள் கூட்டணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

கட்டியெழுப்பப்படும் சமூகத்தை முற்றாக மாற்றியமைக்கும் போராட்டத்தில் பங்காளர்களாக இணைவது தவிர்க்க முடியாத ஒரு பொறுப்பாகும் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் இளைஞர் அமைப்பு ஏற்பாடு செய்த ”நாளைய போராட்டத்திற்கு உயிரூட்டும் புதிய அணி” எனும் வேலைத்திட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

புதிய இளைஞர்களின் போராட்டம் ஒன்றை நாம் முன்னெடுக்க வேண்டியதுடன் திறமைக்கும் ஆற்றலுக்கும் இடமளிக்காமல் அரசியல்வாதிகளின் பின்னால் செல்லும் இந்த நிலை மாற்றியமைக்கப்பட வேண்டுமெனவும் தேசிய மக்கள் கூட்டணியின் முதன்மை வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Comments are closed.