ஊழல் மோசடி அற்ற புதிய அரசியல் காலாசாரத்தை ஐக்கிய மக்கள் சக்தி அறிமுகப்படுத்தியுள்ளது – சஜித் பிரேமதாஸ

காலியில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் உடனான சந்திப்பின் போதே சஜித் பிரேமதாச இதனை தெரிவித்துள்ளார்.

அனைவரையும் வெற்றியாளர்கள் ஆக்குவதே ஐக்கிய மக்கள் சக்தியின் நோக்கம் என்றும் அவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

வர்த்தக துறையில் நியாயமான கட்டமைப்பின் கீழ் அனைவரும் தமது திறமைகளை வெளிக்கொனர்வதற்கான வாய்ப்பினை பெற்றுக் கொடுக்க வேண்டுமெனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

திறமைகளை படைப்பாற்றலூடாக கொண்டு வருவதே ஐக்கிய மக்கள் சக்தியின் நோக்கமெனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதமர் வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Comments are closed.