பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ரகசிய திருமணம் செய்துக்கொண்டார்.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தன் காதலி ஹேரி சைமண்ட்ஸை ரகசிய திருமணம் செய்துக்கொண்டார். இது இவருக்கு 3வது திருமணம் ஆகும்.

பிரிட்டன் பிரதமரான போரிஸ் ஜான்சன் (வயது 56) தனது காதலியான ஹேரி சைமண்ட்ஸ் (33) உடன் கடந்த 2018-ம் ஆண்டு முதல் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்தார்.

இந்த தம்பதிக்கு கடந்த ஆண்டு குழந்தை பிறந்தது. இதனைத் தொடர்ந்து தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக ஜான்சன் – ஹேரி சைமண்ட்ஸ் தம்பதி அறிவித்தனர்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இந்நிலையில், பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது காதலி கேரி சைமண்ட்ஸை ரகசிய திருமணம் செய்து கொண்டார் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

லண்டனில் உள்ள ஒரு தேவாலயத்தில் இந்த திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் சொற்ப எண்ணிக்கையிலான நபர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.

போரிஸ் ஜான்சனுக்கு ஏற்கெனவே 2 முறை திருமணம் நடந்து விவாகரத்து ஆகியுள்ளது; ஜான்சனுக்கு இது 3-வது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து போரிஸ் ஜான்சன் – ஹேரி சைமண்ட்ஸ் தம்பதியருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.