இந்தியாவில் ஒரே நாளில் 7,800 ற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள்

இந்தியாவில் ஒரே நாளில் 7,800ற்கும் அதிகமானவர்களுக்கு புதிதாக கொரோனா தொற்றியுள்ள நிலையில் இந்த எண்ணிக்கையில் மகாராஷ்டிர மாநிலமே முதலிடத்தில் உள்ளதாக மகாராஷ்டிர மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அம்மாநிலத்தில் கடந்த சில நாட்களாக வைரஸ் பரவும் வேகம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருவதாக சுகாதாரத்துறை கவலை தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 50 ஆயிரத்தையும் தாண்டியுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் மகாராஷ்டிர மாநிலத்தில் வைரஸ் தாக்கத்திட்குட்பட்ட 173 பேர் உயிரிழந்துள்ளதுடன் மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது.

Comments are closed.