வெயாங்கொட முச்சக்கரவண்டி விபத்தில் தாய் உள்ளிட்ட மூவர் பலி

வெயாங்கொட மல்லேஹெவ வீதியில்இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் 2 புதல்வர்களும் பலியாகியுள்ளனர்.

குறித்த முச்சக்கர வண்டி தாய் செலுத்தியுள்ள நிலையிலேயே வயலில் விழுந்து விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வேகக்கட்டுப்பாட்டினை கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியாமல் வீதியை விட்டு விலகிய முச்சக்கர வண்டி வயலில் வீழ்ந்து நொருங்கியுள்ளது.

முச்சக்கர வண்டியை செலுத்திய தாய் (40) மற்றும் 9, ஒன்ரரை வயதுடைய புதல்வர்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்த மற்றைய பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிக்சை பெற்று வருவதுடன் வேயாங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.