குற்றவாளிகளின் மறைவிடமாக நாடாளுமன்றம் – அநுரகுமார

நாட்டின் பிரதான குற்றவாளிகளின் மறைவிடமாக நாடாளுமன்றம் மாறிவருவதாக அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.

“நாட்டின் பிரதான குற்றவாளிகளின் மறைவிடமாக நாடாளுமன்றம் மாறிவருகின்றது. எனவே இந்த நாடாளுமன்றம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என விரும்புகின்றோம்.

ஆனால் இந்த விடயத்தில் பொதுமக்களின் பாரிய பங்களிப்பு காணப்படுகின்றது. பொதுமக்களினாலேயே அவ்வாறான உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படுகின்றார்கள் இந்த விடயத்தில் பாரிய வெற்றியினை பதிவு செய்யமுடியாவிட்டாலும்.

நாடாளுமன்றத்தை தூய்மையாக்கக்கூடிய கொள்கை திட்டங்களை நிறைவேற்றக்கூடிய மக்கள் நலன்சார்ந்த விடயங்களை செய்யக்கூடியவர்கள் எமது கட்சியில் இருந்து தெரிவான 6 நாடாளுமன்ற உறுப்பினர்களினால் அதனை நிறைவேற்ற முடியும் என்பதை நான் இங்கு தெரிவித்து கொள்கின்றேன்” என அநுரகுமார திசாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.