நாடு முழுவதிலும் உள்ள அனைத்து சதொச கிளைகளையும் திறக்க அனுமதி.

நாடு முழுவதிலும் உள்ள அனைத்து சதொச கிளைகளையும் இன்று (31) முதல் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சதொச நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் தெரிவித்தார்.

அதேநேரம், 1998 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி, நாளை முதல் சதொசவுடன் தொடர்புகொண்டு அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை , கொழும்பு நகரின் 13 இடங்களில் இன்று முதல் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இந்த நடவடிக்கைகளுக்காக முன்னெடுக்கப்படவுள்ளதாக 13 ட்ரக் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மேலும் ,விசேடமாக மாடிக்குடியிருப்பு தொகுதிகளை அண்மித்து வாழும் மக்கள், இந்த சேவையை பெற்றுக் கொள்ள முடியுமென அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.